• Jul 25 2025

சன்னி லியோன் முன்பு ஜிபி முத்து செய்த காரியம்- நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக அளவில் மிக பிரபலமான நபரில் ஒருவர் சன்னி லியோன். ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர் தற்போது தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சதிஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து ஆகியோர் நடித்திருந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சென்னையில் நடைபெற்றது இதில் சன்னி லியோன் பங்கேற்றிருந்தார்.

அப்போது நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் பிரபல யூடியூபர் ஜிபி முத்துவிடம் ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார் .மேலும்  அந்த டாஸ்க் படி 'வாழை பழத்தை தனது கால் நகத்தை வைத்து தோலை உரிக்க வேண்டும்'.

மேலும் இந்த டாஸ்க் டபுள் மீனிங்கில் இருந்ததால் சன்னி லியோன் முகம் சுளிப்பது போல் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள், " பொது இடத்தில் இந்த மாறி டாஸ்கை எப்படி கொடுக்கலாம், முகத்தை சுளிக்க வைக்கும் காரியங்களை தவிர்க்க வேண்டும்" என்று இணையத்தில் கமன்ட் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement