• Jul 25 2025

திரிஷா படத்தில் இடம்பெற்ற 30 காட்சிகளை அதிரடியாக நீக்கிய தணிக்கை குழு... நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள 'ராங்கி' படத்தை எம்.சரவணன் டைரக்டு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர் ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன்' ஆகிய படங்களை இயக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் திரிஷாவின் 'ராங்கி' படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர் படக்குழுவினர். இப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். 


இதனையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் படத்திற்கு அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து படத்தில் அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது. 


இந்த விவகாரம் தொடர்பாக படத்தின் டைரக்டர் சரவணன் கூறும்போது, ''முந்தைய சில படங்களில் இருந்த வார்த்தைகளையே ராங்கி படத்திலும் பயன்படுத்தினோம். ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையில் சர்வதேச குழுக்கள் தொடர்பு இருப்பதுபோன்று திரைக்கதை அமைத்து இருந்தோம். இதனால் வெளிநாடுகள் சம்பந்தமான காட்சிகள் இருந்தன. அந்த பெயர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கிவிட்டனர். இதனால் படம் வெளியாவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு விட்டது" எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்.

Advertisement

Advertisement