• Jul 23 2025

சகோதரர்கள் இருவரும் கெட்டிக்காரர்.. அஜித்தை நினைத்துப் பயந்த தந்தை.. நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தன்னுடைய திறமையினாலும், கடின உழைப்பினாலும் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் அஜித். இவ்வாறான ஒரு உச்ச நடிகர் அஜித் இன்று தன் தந்தையை இழந்து சோகத்தில் வாடி வருகின்றார். இதனையடுத்து அவருக்கும், தந்தைக்கும் இடையில் நடந்த சுவாரஷ்ய சம்பவங்கள் பலவும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில் அஜித்தின் எதிர்காலத்தை எண்ணி அவரின் தந்தை சுப்பிரமணியம் ஆரம்பத்தில் மிகவும் பயந்துள்ளாராம். அதாவது சுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார் என மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் அனுப் குமார் மற்றும் அனில் குமார் இருவரும் கெட்டிக்காரர். இவர்கள் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்துள்ளனர்.


இதனால் அஜித்தின் எதிர்காலத்தை நினைத்து தந்தை மிகவும் பயந்திருக்கின்றார். ஏனெனில் அஜித் தன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாடலிங் மற்றும் பைக்கில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவ்வாறு படிப்பில் நாட்டம் இல்லாத அஜித்தை தன் நண்பரின் உதவியுடன் பைக் மெக்கானிக் வேலையில் சேர்ந்துள்ளார் தந்தை. இதனால் அஜித்தின் தந்தை மிகவும் கவலைப்பட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பைக் மெக்கானிக்காக அஜித் வேலை செய்கின்றார், அவரின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை அஜித்தின் தந்தைக்கு இருந்துள்ளது. இதனை புரிந்துகொண்ட அஜித் மெக்கானிக் வேலையை விட்டுவிட்டு கார்மன்ட் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின்னர் வியாபாரம், மாடலிங் என செய்து வந்த அஜித் பல போராட்டங்களுக்கு பிறகு உச்ச நடிகராக உயர்ந்தார். 


அந்தவகையில் மாடலிங் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அஜித்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அடையாளம் கண்டு அவரை படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அஜித் முழுமையாக திரைத்துறையில் ஈடுபட துவங்கினார். 

இவ்வாறாக தன் தந்தையின் கவலையையும், பயத்தையும் உணர்ந்த அஜித் அவர் பெருமைகொள்ளும் வகையில் இன்று உலகமே நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement