• Jul 25 2025

நஷ்ரியாவின் கணவரிடம் வருமான வரித் துறையினர் ஆய்வு.. நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கேரள மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வந்திருந்தனர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக கடந்த 17-ஆம் தேதி நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விளக்கம் பெற்று இருந்தனர்.


இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் பஹத் பாசிலிடம் நிதி பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி அது தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளனர். அந்தவகையில் முன்னதாக பஹத் பாசிலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் இந்த விசாரணை குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் பஹத் பாசில் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒ.டி.டி. தளங்கள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் முன்பணம் பெற்றதாகவும், ஆனால் அந்த படங்களில் நடிப்பதற்கான தேதிகளை இதுவரை ஒதுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. 


அத்தோடு இந்தத் தொகை பஹத்தின் வருமானத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் பஹத் பாசிலிடம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement