• Jul 26 2025

'குக் வித் கோமாளி' ஷோவிலிருந்து பாதியில் வெளியேறிய முக்கிய பெண் போட்டியாளர்.. என்ன ஆச்சு..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியானது இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. அதில் முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். அதேபோன்று இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டிலை வென்றிருந்தனர். 


இந்த மூன்று சீசன்களின் அமோக வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆனது ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் குக்குகளாக விசித்ரா, ஷெரின், காளையன், கிஷோர், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஆண்ட்ரியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய ஷிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.


மேலும் இந்த சீசன் ஆனது தற்போது நான்காவது வாரத்தை தொட்டு இருக்கிறது. கடந்த வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் immunity band பெறுவதற்கான போட்டிகள் நடக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் வழக்கம் போல கோமாளிகள், போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் என எல்லோரும் ஷோவுக்கு வந்த நிலையில் ஒரு போட்டியாளர் திடீரென பாதியில் வெளியேறி உள்ளார். அந்தவகையில் நடிகை விசித்ரா தான் பாதியில் வெளியேறி உள்ளார். அவரது குடும்பத்தில் எமெர்ஜன்சி என சொல்லி அழைப்பு வந்தமையால் தான் இவர் பாதியிலேயே கிளம்பி இருக்கின்றார்.


மேலும் அவரது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க தான் விசித்ரா சென்று இருக்கிறார் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement