• Jul 25 2025

அஜித் வரலேனா என்ன.. நாங்க இருக்கோம்! ‘துணிவு’ போஸ்டரை புரமோட் செய்யும் ரசிகர்கள்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் குமார்,  தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


 இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். மேலும் இவர் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படமும், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகிறது.


இந்நிலையில் இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. வழக்கம்போல் இந்த படத்தின் புரமோஷனுக்கு வர மறுத்த அஜித், ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவை இல்லை என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


தற்போது கால்பந்து உலகக்கோப்பை தொடரில் துணிவு பட பேனருடன் வந்து மாஸ்காட்டு வருகின்றனர். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement