• Jul 24 2025

அவங்க முன்னாடி நாம வாழ்ந்து காட்டணும்.. பாக்கியாவிடம் கூறிய பழனிச்சாமி.. அடுத்து ராதிகா எடுக்கும் முடிவு என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமி விறுவிறுப்பான கட்டங்களைக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையில் அடுத்ததாக பாக்கியாவிடம் ராதிகா இன்னும் இரண்டு நாள்ல பேக்கரி ஐட்டம் எல்லாம் இங்கே இருக்க வேண்டும் எனக் கூறி இருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது கடையிலிருந்து எதையும் வாங்க கூடாது, எதுவாக இருந்தாலும் நீங்க தான் சமைக்கணும் எனக் கூறி இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற டாஸ்க் என சொல்லி இருக்கின்றார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது அதில் கிளாசுக்கு வந்த பாக்கியா ராதிகா சொன்னது நினைத்து என்ன செய்வது என வருத்தத்தில் உட்கார்ந்து இருக்கின்றார். அதற்கு பழனிசாமி விஷயத்தை கேட்க பாக்கியா நடந்ததை சொல்கின்றார்.


இதனைக் கேட்டதும் பழனிச்சாமி "நாம தோத்தால் சந்தோசப் படலாம் என நினைக்கிறவங்க முன்னாடி நாம தோத்திடவே கூடாதுங்க, வாழ்ந்து காட்டணும்" எனக் கூறுகின்றார். மேலும் இதெல்லாம் ரொம்ப ஈஸியான விஷயம் என்று கூறி பாக்கியாவிற்கு சொல்லி கொடுக்கின்றார். அதனைக் கேட்டுக் கேட்டு எல்லாவற்றையும் தானே சமைக்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இந்த டாஸ்க்கில் பாக்கியா வெற்றி பெற்றதும் ராதிகா அடுத்ததாக என்ன முடிவினை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement