• Jul 24 2025

திரையுலகில் பரபரப்பு... லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை.. பின்னணி என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருவது லைகா. இந்நிறுவனமானது கோலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்து உள்ளது. அந்தவகையில் கடைசியாக லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி நடை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது அஜித்தின் விடாமுயற்சி பத்தினையும் லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள லைகா நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அந்தவகையில் சென்னையில் உள்ள தியாகராய நகர், காரப்பாக்கம், அடையாறு உள்பட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் மீது சோதனை நடத்தி வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement