• Jul 26 2025

மனநலம் பாதிக்கப்பட்ட நடிகை கனகா..? உறவினரின் மோசமான செயல் தான் காரணமா..? பின்னணி என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'கரகாட்டக்காரன்' படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை கனகா. இவர் குறிப்பாக 90 களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருந்தவர்.


தமிழில் மட்டுமல்லாது மேலும் பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தனது திரையுலக வாழ்க்கையில் மொத்தம் 40 திரைப்படங்களில் நடித்தவர். இவ்வாறாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்த கனகா சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் நடிகை கனகா பேசுகையில் "எனக்கு 50 வயது ஆகிவிட்டது சினிமாவில் நடிக்க விரும்பினாலும் நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பயங்கர வைரலானது.


கனகா தன்னுடைய வீட்டில் தனியாக தான் இருந்து வருகிறார். அவருக்கு துணையாக இருப்பது அவரின் உதவியாளர் ஒருவர் மட்டுமே. இந்நிலையில் நடிகை கனகா பற்றி அவரின் உதவியாளரிடம் கேட்டதற்கு "நெருங்கிய உறவினர்களின் மோசமான செயலால் கனகா இப்படி மாறிவிட்டார்" என்று அவர் ஓப்பனாக கூறியுள்ளார்.


மேலும் கனகா மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கெனவே கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும் கனகாவிடம் உறவினர் தவறாக நடந்ததால் தான் அவரின் மனநலம் பாதிக்கப்பட்டதா என ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement