• Jul 23 2025

பிரபல நடிகையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா சூரி..? தீயாய் பரவும் தகவல்.. பின்னணி என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ என்ற படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சூரி. அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து, தன்னுடைய பேச்சினாலும், உடலசைவினாலும் ஏராளம் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.


இவ்வாறாக தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி தற்போது ஹீரோவாகவும் களமிறங்கிவிட்டார். அந்தவகையில் தற்போது வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இப்படத்தின் உடைய ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.


மேலும் இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஹீரோவாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் சூரி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தான் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகையான ஆனா பென் என்பவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் இப்படத்தினுடைய பூஜையில் இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்து பெரும் குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கின்றது. அதாவது இதை பார்த்த ரசிகர்கள் சிலர் ஷாக்காகி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என்று தாறுமாறாக கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். 

ஆனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்புகைப்படம் அப் புதிய படத்தின் பூஜையில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement