• Jul 24 2025

என் வீட்டிற்கு மருமகளாக வர என்ன தகுதி இருக்கு... தீபாவின் தாலியை கழட்டி எறியச் சொன்ன அபிராமி.. கை கொடுப்பாரா கார்த்திக்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'கார்த்திகை தீபம்'. இதில் கார்த்திக் நட்சித்திராவிற்குப் பதிலாக தீபாவின் கழுத்தில் தான் தாலி கட்டி இருக்கின்றார். இதனால் சீரியலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. அதில் அபிராமி தீபா இந்த வீட்டிற்கு மருமகளாக வருவதற்கு எந்த அருகதையும் இல்லை என தீபாவின் பெற்றோரிடம் கூறுகின்றார். அதற்கு தீபா "இதில் என் தப்பு எதுவுமே இல்லை, சிவா சேர் தான் எல்லாமே முன்னின்று செய்தார்" எனக் கூறுகின்றார்.


அந்த சமயத்தில் அங்கு வந்த சிவா "எனக்கும் இந்த கல்யாணத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை' எனக் கூறுகின்றார். பின்னர் பணத்திற்காக தானே இதெல்லாம் செய்தீங்க என அபிராமி தீபாவைத் திட்டுகின்றார். அதுமட்டுமல்லாது கார்த்திக் கட்டிய தாலியைக் கழட்டி வைத்து விட்டு தீபாவை வெளியேறுமாறும் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 

அடுத்து கார்த்திக் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement