• Jul 24 2025

இதை கூட ஜாலியா எடுத்துக்கமாட்டாரா என்ன ஆளு இவரு?- விக்ரமனிடம் மன்னிப்புக் கேட்ட அமுதவாணன்- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி Finale கட்டத்தை எட்டி உள்ளது தான். 5 பேர் தற்போது Finale சுற்றில் உள்ள நிலையில், இதற்கு முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர். அதே போல பிரபலங்களான டிடி, மாகாபா ஆனந்த், நடிகர் சரவணன் உள்ளிட்ட பலரும் கூட பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

 அவர்கள் அனைவரும் வந்த சமயம், மிகவும் பாசிட்டிவ் மிக்க தருணமாக அமைந்திருந்தது.இதற்கடுத்து, இந்த முறை Bigg Boss Finaleவில் வெற்றி பெறுவது யார் என்பது பற்றிய கணிப்புகளையும் பார்வையாளர்கள் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.இதனிடையே, சக ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் அனைவரும் நெகிழ்ச்சியான விஷயங்களை பேசி வருகின்றனர்.


 அந்த வகையில், அனைத்து போட்டியாளர்கள் முன்பு விக்ரமன் குறித்து பேசி இருந்த அமுதவாணன், "ஆரம்பத்தில் இந்த ரேங்கிங் டாஸ்க்ல இருந்து எனக்கும் விக்ரமனுக்கும் சண்டை வந்தது. அப்புறம் அந்த சண்டை தொடர்ந்து வந்துட்டே இருந்தது. இந்த வில் அம்பு டாஸ்க், அப்புறமா அந்த கோர்ட் டாஸ்க்ன்னு இதுல எல்லாத்துலயுமே சண்டை வந்துட்டே இருந்தது.

ஆனா இந்த ஒரு மாசமா பார்த்தீங்கன்னா ரொம்ப ஜாலியா பழக ஆரம்பிச்சிட்டோம். அவ்ளோ ஒரு கலகலப்பா இருக்குற ஒரு ஆளு. இவரு ஜாலியா இருப்பாராங்குறது இந்த ஒரு மாசமா தான் தெரியுது. அதுக்கு முன்னாடி நான் செமையா திட்டி இருக்கேன். சிலர் கூட சேர்ந்தும் திட்டி இருக்கேன், தனியாவும் திட்டி இருக்கேன். திட்டி இருக்கேன்னா என்ன இது கூட ஜாலியா எடுத்துக்க மாட்டாரு, சீரியஸா எடுத்துக்கிட்டு இருக்காரு அப்படின்னு ஜிபி முத்து அண்ணா என்ன சொல்றாரோ, அதே மாதிரி தான் நானும் சொல்லிட்டு இருக்கேன். அப்படி ஏதாவது ரொம்ப சொல்லி இருந்தா மிகப்பெரிய ஒரு மன்னிப்பு கேட்டுக்குறேன்" எனக் கூறியிருந்தார்.


அதேபோல விக்ரமன் பற்றி பேசிய ரச்சிதா, "உங்களோட ஐடியாலஜி எல்லாமே புரியிறதுக்கு நமக்கு கொஞ்சம் லேட்டா தான் ஆகும். புரிஞ்சாலுமே ஏத்துக்குறதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும். அதுதான் எல்லாருக்குமே ஆயிருக்கு. உண்மைய சொல்லப்போனா, அந்த விஷயத்துல உங்களோட ஐடியாலஜி எல்லாத்தையும் நான் மதிக்கிறேன். இதுக்கு அப்புறம் கண்டிப்பா நம்ம ஃப்ரண்ட்ஸா தான் இருப்போம். அதுல எந்த சந்தேகமும் இல்லை" என பேசி இருந்தார்.


Advertisement

Advertisement