• Jul 26 2025

கதிரவனுடைய தோழி பற்றி குயின்சி சொன்ன விஷயம்..உடனே நெஞ்சில் கைவைத்த கதிரவன்..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 

இவ்வாறுஇருக்கையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரின் மற்றும் நிவாஷினி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார்.அத்தோடு அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.



இதனிடையே, இந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் தெரிவித்து இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இவ்வாறுஇருக்கையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.



இவ்வாறுஇருக்கையில், வீட்டுக்குள் உள்ள கார்டன் பகுதியில் கதிர், குயின்சி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது வெளியே உள்ள தனது தோழி பற்றி கேட்கிறார் கதிர். அவருக்கு பதில் சொல்லும் குயின்சி,"உன்னால எந்த பிரச்சனையும் இல்ல. ஏன் கவலைப்படுற? அவங்க உங்க அப்பா, அம்மா கிட்ட பேசபோறாங்கன்னு அவ சொல்லிருக்கா. ஆல் த பெஸ்ட்" என சிரிக்கிறார்.

உடனே தனது நெஞ்சில் கைவைத்து,"உண்மையாகவா? அவங்களுக்கு தெரியுமா? ஆமா, உலகத்துக்கே தெரிஞ்சிருக்கும். வீட்டுல எல்லாம் குட் தானே?" என சிரித்தபடி கேட்கிறார் கதிரவன். இதனை கேட்ட குயின்சி,"எவ்ரிதிங் குட்" என்கிறார். இதனைக்கேட்டு புன்னகைத்தபடி அமர்ந்திருக்கிறார் கதிர்.




Advertisement

Advertisement