• Jul 24 2025

கை தூக்கி விட்டவருக்கு ரஜினி செய்த காரியம்...என்ன தான் நடந்திருக்கும்..?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

1980களில் தமிழ் சினிமாவில் இருந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடர்ந்து முன்னேறி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அன்றும் இன்றும்  அதே ஸ்டைலோடு, தன்னம்பிக்கையோடு மக்களை ரசிக்க வைத்து சாதனை செய்து வருகிறார். 


விஜய் , அஜித் படங்களை விட ரஜினி படங்களின் வசூல் இன்றும் கூட உச்சம் தொட்டு வருகிறது. என்றும் மாறா இளமையுடனும் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். இவரை திரையில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கே அமையும் என்பது அனைவரும் அறிந்தது.


சாதாரண மனிதராக இருந்த ரஜினியை இன்று உலகமே கொண்டாடும் வகையில் மாற்றிய பெருமை அவருக்கே உரியது. இப்படிப் பட்ட பாலசந்தரை எந்த ஒரு தருணத்திலும் ரஜினி மறந்ததே இல்லை. ஒரு சமயம் ‘நெற்றிக்கண்’ படத்திற்காக அவரிடம் கால்ஷீட் வாங்க கவிதாலயாவில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரமிடு நடராஜன் சென்றிருந்தார்.


படத்தை பற்றி எல்லாம் பேசி முடித்ததும் பிரமிடு நடராஜன் அட்வான்ஸ் தொகையாக சிறு தொகையை எடுத்து கையில் நீட்ட அதை பார்த்ததும் ரஜினி உடனே எழுந்து ‘ஐய்யயோ அதெல்லாம் வேணாம், பாலசந்தர் படத்திற்கு நான் அட்வான்ஸ் வாங்கனுமா? அதெல்லாம் வேணாம்.’ என்று சொன்னாராம்.


பிரமிடு நடராஜன் ‘ரஜினி, உங்க சம்பளம் என்ன என்பதை ஏ.வி.எம் நிறுவனத்திடம் பேசி விட்டு தான் வந்திருக்கிறேன், அதுவும் போக நீங்கள் இதை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இந்த ப்ராஜக்டையே விட்டு விடுவோம். மேலும் நீங்களும் எஸ்.பி.முத்துராமன் இணையும் இந்த கூட்டணியை நாங்கள் தொடர மாட்டோம்’ என்று கூறினாராம்.


அதனால் ரஜினி அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்டாராம். நெற்றிக்கண் படத்தை எஸ்.பி,முத்துராமன் தான் இயக்கியிருந்தார். இந்த சுவாரஸ்ய தகவலை பிரமிடு நடராஜன் ஒரு பேட்டியில் கூறினார்.


Advertisement

Advertisement