• Jul 24 2025

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சைக்கு மத்தியில்... நேரடியாக களத்தில் இறங்கி ரஜினி ரசிகர்கள் செய்த செயல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அன்றைய காலம் தொட்டு இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் ரசிகர்களால் ஒரே சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுவது ரஜினி மட்டுமே. 


இந்நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றமை நம் அனைவருக்கும் தெரியும். அதாவது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை நான் கூறியிருந்தேன் என்றார். 

சரத்குமார் கூறிய இந்த விடயமானது சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், ரசிகர்களிடம் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சினிமா பத்திரிகையாளர் பிஸ்மியும் ரஜினியின் காலம் முடிந்தது, இனி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என பேசியிருந்தார். இதனால் படு ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலகத்திற்கு நேராக சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 


இவ்வாறாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த ரஜினி விமானத்தில் சென்னை திரும்பினார். இதனை அடுத்து அவரை வரவேற்க காத்திருந்த ரசிகர்கள், ரஜினிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தனர்.


அதுமட்டுமல்லாது அந்த சமயத்தில் "அகில உலக சூப்பர் ஸ்டார்... ஒரே சூப்பர் ஸ்டார்... தலைவா... தலைவா..." என அவரை சூழ்ந்து கொண்டு கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். இதனை பார்த்த ரஜினி காரில் ஏறும் வரையில் ரசிகர்களை புன்னகையுடன் பார்த்தபடிச் சென்றார்.


மேலும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் வைரலானதால், ரஜினி ரசிகர்கள் இப்போது நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தவகையில் விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே ரஜினியை அகில உலக சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி கூச்சலிட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

Advertisement

Advertisement