• Jul 25 2025

மஹாலட்சுமிக்கு தெரியாமல் ரவீந்தர் செய்த காரியம் - கடுப்பான ரசிகர்கள்- காலையிலேயே வெறுப்பேத்தாதீங்கப்பா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் வெளியான சில தரமான படங்களை தன்னுடைய, லிப்ரா நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளவர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், கடந்த வாரம்... பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான மஹாலட்சுமினியை சுமார் ஒன்றரை வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, திருப்பதியில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டது.இவர்கள் திருமண புகைப்படம் வெளியானபோது கூட பல இது மூவி ப்ரமோஷனாக தான் இருக்கும் என நினைத்தனர். பின்னர் தான் இது உண்மையாகவே பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் என தெரியவந்தது. 


திருமணம் ஆகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும், இவர்களை பற்றிய தகவல் தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.திருமணம் முடிந்த கையேடு, குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம், தனி விமானத்தில் ஹனி மூன் கொண்டாட சென்றது, 

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்கள் தமது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில்  மஹாலட்சுமி நித்திரையில் இருக்கும் புகைப்படத்தை அதிகாலையியே ரவிந்தர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement