• Jul 25 2025

மாவீரன் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு சிவகார்த்திகேயன் கூறிய விடயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், டான் என்று  பல மாஸ் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்தப் படத்தை யோகி பாபி நடிப்பில் வந்த மண்டேலா படத்தை இயக்கி 2 தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். 

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக விருமன் பட புகழ் அதிதி நடித்து வருகிறார்.அத்தோடு  சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இவ்வாறுஇருக்கையில், இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியானது. நேற்று வெளியான மாவீரன் போஸ்டரை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அத்தோடு வீரமே ஜெயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தப் படத்தைத் தொடர்ந்து, கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பெரியசாமி இயக்குகிறார். இது தவிர, வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ.40 கோடி சம்பளம் கேட்டதாகவும், இறுதியாக ரூ.27 கோடிக்கு ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement