• Jul 25 2025

குயின்ஷியை உனக்குப் பிடிச்சிருக்கா... ஓப்பனாக கேட்ட அமுதவாணன்... ராமின் பதில் என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. 21 பேருடன் அமோகமாக ஆரம்பமான நிலையில் சாந்தி, ஜிபி முத்து, அசல், ஷெரினா, நிவாஷினி ஆகியோர் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறி விட்டார்கள். மீதமாக உள்ள போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது.


அதேபோன்று மறுபுறம் காதல் லீலைகளும், ரொமாண்டிக் பார்வைகளும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது ரொபேர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் காதல் பார்வைகளுக்கு எல்லையே இல்லாமல் இருந்து வந்தது. அதுமட்டுமல்லாது அமுதவாணனுக்கு ஜனனி பகடைக்காயாக இருக்கிறார் எனவும் ஒரு சில சர்ச்சைகள் எழுந்திருந்தன.


அத்தோடு குயின்ஷி தன்னுடைய மாமாப்பொண்ணு என ராமும் முன்னர் ஒருமுறை கிண்டலாக கூறி வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அமுதவாணன், ஜனனி, ராம் ஆகியோர் ஒரு இடத்திலிருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது அமுதவாணன் ஜனனியை பார்த்து "ராமை உனக்குப் பிடிச்சிருக்கா" எனக் கேட்கின்றார். அதற்கு ஜனனி இல்லை எனக் கூறுகின்றார்.


அதுமட்டுமல்லாது அதே கேள்வியை ராமிடமும் "உனக்கு ஜனனியை பிடிச்சிருக்கா" எனக் கேட்கின்றார். அதற்கு ராமும் இல்லை என்கின்றார். அதற்கு உடனே அமுதவாணன் "அப்போ உனக்கு குயின்ஷியை பிடித்து இருக்கா" எனக் கேட்கின்றார். அதற்கு ராம் "எனக்கு யாரையும் பிடிக்கல, எனக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும்" எனக் கூறுகின்றார்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement