• Jul 24 2025

என்னது மறுபடியும் முதல்ல இருந்தா..?வெற்றிமாறனின் விடுதலை 2 ஆல் நொந்து நூலாகி போன தயாரிப்பாளர்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை தூண்டி இருந்த அப்படம் எதிர்பார்ப்பை பொய்யாக்காத அளவுக்கு நல்ல விமர்சனங்களையும் பெற்றது. அதைத்தொடர்ந்து அடுத்த பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் வெற்றிமாறன் இன்னும் நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்று சொல்லும் வகையில் ஒரு அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். அதாவது விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்குமான படப்பிடிப்பை வெற்றிமாறன் எப்போதோ எடுத்து முடித்து விட்டார்.

ஆனால் இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளை இப்போது பார்க்கும்போது ஏதோ ஒரு குறை இருப்பதாக அவருக்கு தோன்றுகிறதாம்.இயல்பாகவே வெற்றிமாறன் எதார்த்தமான கதைக்களத்தை தான் விரும்புவார். அதே போன்று நடிகர்களின் நடிப்பும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். 

ஆனால் அவருடைய இந்த நல்ல குணம் தயாரிப்பாளருக்கு தான் இடியாக வந்து இறங்கி இருக்கிறது. அதாவது இப்போது விடுதலை 2 படத்திற்கான சில காட்சிகளை ரீ ஷூட் செய்யும் முடிவில் வெற்றிமாறன் இருக்கிறாராம். ஏற்கனவே நான்கு கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை 45 கோடிக்கு மேல் மாறியது.

அதேபோல் ஒரே பாகமாக வரவேண்டிய படம் இரண்டு பாகமாகவும் உருமாற்றம் அடைந்தது. இதனாலேயே நொந்து போன தயாரிப்பாளர் தற்போது மறுபடியும் முதல்ல இருந்தா என்று இந்த விஷயத்தை கேட்டு ஆடிப் போய் இருக்கிறாராம். அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்திற்கு இன்னும் 40 கோடி செலவானால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

மேலும் தன் மனதில் நினைத்தவாறு காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ள வெற்றிமாறன் அதற்காக சூரியின் தேதிகளை கூட வாங்கிவிட்டார். ஆனால் விஜய் சேதுபதியை தான் பிடிக்க முடியவில்லை. அவர் வந்தவுடன் எப்படியும் இந்த படப்பிடிப்பு ஆரம்பித்து விடுமாம்.


Advertisement

Advertisement