• Sep 11 2025

இறந்த பிரபுவின் உடலை மூட்டை கட்டி மறைக்கும் கயல்... போலீஸிற்குத் தெரிய வந்த உண்மை... அதிர்ச்சியில் ஆனந்தி... இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் உயிரிழந்த பிரபுவின் உடலை ஆனந்தியும், கயலும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் மூட்டை கட்டி கிச்சனில் மறைத்து வைக்கின்றனர்.


அப்போது ஆனந்தி "கிச்சனில் வந்து அவங்க ஆராய்ந்தால் என்ன அக்கா பண்ணுறது" எனக் கயலிடம் கேட்டு அழுகின்றார். அந்த சமயத்தில் போலீசார் அங்கு வருகின்றனர். வந்து பர்ஸ் கிடைச்சுதா இல்லையா என கயலிடம் கேட்கின்றனர். பதிலுக்கு கயல் இன்னும் கிடைக்கல, தேடிற்று தான் இருக்கோம் என்கிறார்.


அதற்கு மூர்த்தி ஆனந்தி தான் பர்ஸ் எடுத்திற்று வரலையே, அப்புறம் எப்படிக் காணாமல் போகும் என கேட்கின்றார். இதனை கேட்டதும் போலீசார் சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்கின்றனர். எனவே கயலும் ஆனந்தியும் கையும் களவுமாக பிடிபட்டு விட்டார்கள் போல் தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement