• Sep 14 2025

ஈஸ்வரிக்கு தெரியவந்த உண்மை... வசமாக சிக்கிய பாக்கியா... இனி நிகழப்போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

அதில் எழில் அம்மாவை ஒரு சேனல் பேட்டி எடுத்திருப்பதாக கூறி மொபைலில் வந்த வீடியோ ஒன்றினைக் காட்டுகின்றார். அந்த வீடியோவில் பாக்கியா என் அத்தை எனக்கு எப்பவுமே தெய்வம் மாதிரி அதனால் நான் காலேஜ்ஜிற்கு சேர்வதற்கு அவர்கள் எப்போதுமே நோ சொல்ல மாட்டாங்க எங்க கூறுகின்றார்.


இதனையடுத்து ஈஸ்வரி பாக்கியாவிடம் இதெல்லாம் என்ன..? காலேஜ்ஜில் சேர்ந்திடுவேன்னு சொல்கிறாய் எனக் கேட்கின்றார். பதிலுக்கு பாக்கியா ஈஸ்வரியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றார்.

பின்னர் ஈஸ்வரி "அப்போ நீ காலேஜ்ஜில் சேர்ந்திட்டாய் அப்பிடித்தானே" என்கிறார். இதற்குப் பதில் சொல்ல முடியாமல் பாக்கியா தவிக்கின்றார். 

இதனையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement