• Jul 25 2025

என்னது பேட்டியா? பதறி ஓடிய விஜய் - உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம் ..! நடந்தது என்ன?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய். அவரது படங்கள் அனைத்துமே அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யக்கூடியவை. இதன் காரணமாக அவரை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கும் தயாரிப்பாளர்கள் அனைவருமே தயாராக இருக்கிறார்கள். 

விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது படம்.

லியோ படத்தினை தொடர்ந்து விஜய்க்கு 68ஆவது படமாகவும், ஏஜிஎஸ்ஸுக்கு 25ஆவது படமாகவும் தளபதி 68 உருவாகிறது. யுவன் இசையமைக்கிறார். வெங்கட் பிரபு - விஜய் முதல்முறையாக இணைந்திருப்பதால் அனைவரது கவனமும் இப்போது விஜய் 68ல்தான் இருக்கிறது.

 இந்நிலையில் பத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பாஸ்கி பகிர்ந்திருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், "யூத் படத்தில் நடித்தபோது என்னிடம் விஜய், உங்கள் நிகழ்ச்சிக்கு எனது அம்மா பெரிய ரசிகை என்றார். உடனே நான் நீங்களும் பேட்டிக்கு வரலாமே என்றேன். அதற்கு அவரோ, ஏங்க நான் நார்மலான பேட்டிக்கு வரவே தயங்குவேன். நீங்கள் காமெடி பேட்டிக்கு கூப்டுறீங்க என்று கூறிவிட்டார். அந்தப் படத்தில் நடித்தபோது விஜய் ஒரு சிறந்த மனிதர் என்பதை புரிந்துகொண்டேன். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் என்னை நன்றாகவும் கவனித்துக்கொண்டார்.என் கூறியிருந்தார்.


Advertisement

Advertisement