• Jul 25 2025

என்னது..நாங்கள் திருமணம் செய்துவிட்டோமா? எப்படி நடந்தது? ராகுல் ப்ரீத் சிங் கேள்வி

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியும் கடந்த 2021-ல் தங்களுடைய காதல் குறித்து இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. சமீபத்தில் கூட தனது காதலர் ஜாக்கி பாக்னானியுடன் விடுமுறைக்காக மாலத்தீவுக்கு சென்றார் ரகுல் ப்ரீத் சிங்.

கடந்த ஆண்டில் இருந்தே, ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி பாக்னானியின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வருகின்றனர். அந்த வகையில், இப்பொது அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது, நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது காதலர் ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்து கொண்டதாக வெளியான வதந்திக்கு பதிலளித்துள்ளார். '

ஒவ்வொரு வாரமும் எனது திருமணம் பற்றிய செய்திகள் வருகிறது.கடந்தாண்டு நவம்பர் மாதம் எனக்கு திருமணம் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால், திருமணம் எப்படி நடந்தது என சொல்லவில்லையே? என நகைச்சுவையாக கேலி செய்ததோடு, தற்போது நாங்கள் இருவரும் பிஸியாக இருப்பதால், வேலையை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

ராகுல் கடைசியாக ‘கடவுளுக்கு நன்றி’ படத்தில் நடித்தார். இதற்கிடையில், தமிழ் சினிமாவில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தின் வெளியீட்டிற்காக ரகுல் ப்ரீத் சிங் காத்திருக்கிறார். தற்போது , கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement