• Jul 25 2025

அண்ணிக்கு என்ன ஆச்சு..? கோபத்தில் கத்தும் கதிர்.. உண்மையை உளறிக் கொட்டிய முல்லை... இனி நடக்கப்போவது என்ன..? பரபரப்பான ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதில் கிச்சனில் தனம் வேலை செய்து கொண்டிருக்கின்றார். அதற்கு முல்லை "அக்கா உங்களுக்கு ஆப்பரேஷன் நடந்திருக்கு நீங்க இதெல்லாம் செய்யக்கூடாது" எனக் கூறுகின்றார்.


அந்த சமயத்தில் அங்கு வந்த கதிர் இதனை காதில் வாங்கிக் கொள்கின்றார். பின்னர் முல்லையிடம் சென்று "அன்னிக்கு ஆப்பரேஷன் நடந்த என்று எதோ சொல்லிட்டு இருந்தியே அது என்ன" எனக் கேட்கின்றார். பதிலுக்கு முல்லை எதுவும் சொல்லாமல் இழுக்கின்றார். உடனே கதிர் முல்லையை மிரட்டுகின்றார்.

அதாவது "அண்ணிக்கு ஏதோ பிரச்சினை, தயவுசெய்து என்னன்னு சொல்லு" எனக் கேட்கின்றார். முல்லையும் தனத்திற்கு கேன்சர் என்ற உண்மையை சொல்லுகின்றார்.  


Advertisement

Advertisement