• Jul 24 2025

''ரோலைக்ஸை பேபிமா சந்தித்தபோது”.... ரெண்டிங் ஆகி வரும் புகைப்படம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் அவன் -இவன். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஜனனி ஐயர் நடித்திருந்தார். நடிகர் சூர்யாவும் முக்கியமான ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், அவன் இவன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது ஜனனி ஐயர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரோலைக்ஸை பேபிமா சந்தித்தபோது” என குறிப்பிட்டு பதிவுட்டுள்ளார்.

பேபிமா என்றால், அவர் அவன் இவன் திரைப்படத்தில் அந்த பெயருடைய கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். அதைப்போல சூர்யாவும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சமீபத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.  

எனவே இந்த புகைப்படம்  அவன் இவன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் ஜனனி இந்த கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement