• Jul 24 2025

''சித்தப்பு நீங்க எப்ப வந்தீங்க''... ரஜினியை விடாமல் துரத்தித் துரத்தி கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது.அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார்.

தமன்னாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சின்னதாக ஸ்டெப் போட்டு ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார்.

இதனை ட்ரோல் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டாரை வம்பிழுத்துள்ளார்.

காவாலா பாடலில் தமன்னாவின் ஆட்டத்துக்கு நடுவே சூப்பர் ஸ்டார் ரஜினியும் சைட் கேப்பில் என்ட்ரி கொடுத்திருப்பார். ஸ்டைலாக கூலர்ஸ்ஸை சுழற்றி ரசிகர்களுக்கு வைப் கொடுத்த தலைவர், டான்ஸ் ஆடுவதில் கொஞ்சம் திணறிதான் போய்விட்டார். வயதாகிவிட்டதால் சூப்பர் ஸ்டாரிடம் பழைய எனர்ஜி இல்லை என அவரது ரசிகர்களே கூறியிருந்தனர்.

அதேபோல் ரஜினிக்காக இல்லை என்றாலும் தமன்னாவிற்காக ஜெயிலர் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம் எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்தனர். இதனிடையே ரஜினியின் வயதை வைத்தும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் ட்ரோல் செய்யப்பட்டது. அப்படி வெளியான மீம் ஒன்றை தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ரஜினியை வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை.

வடிவேலு மீம்மான அதில், வடிவேலுவின் ஃபேவரைட் டயலாக்கான "சித்தப்பூ நீங்க எப்போ வந்தீங்க" என ரஜினியை பார்த்து கேட்பதாக இந்த மீம் கிரியேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது காவாலா பாடலை இரண்டாவது முறையாக பார்க்கும் போது தான், ரஜினியும் நடனமாடியது கண்ணில் பட்டது என்பதாக ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு ரஜினி ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது.

இதனை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் சும்மாவே இருக்க மாட்டார், அவருக்கு தமன்னாவுடன் ஆட முடியாமல் போன வருத்தம், அதனால் தான் இப்படியெல்லாம் புலம்பி வருவதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம் ப்ளூ சட்டை மாறனின் டிவிட்டர் போஸ்ட்டை ஜாலியாக ரசித்து ஸ்மைலி எமோஜியை தட்டிவிட்டுள்ளனர் பலர்.


Advertisement

Advertisement