• Jul 23 2025

இந்த காரெக்டர் Name கேட்டதும் வீட்ல சந்தோஷப்பட்டாங்க- சிறகடிக்க ஆசை சீரியல் நாயகனின் இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு இந்த சீரியலை பலரும் விரும்பிப் பார்த்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெற்றி வசந்த். இவருக்கு இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது.


இந்த நிலையில் அண்மையில் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று யாரைச் சொல்லுவேன் என்றால் இப்போ வளர்ந்து வரும் ஜுனியர் ஆட்டிஸ்டை தான் சொல்வேன். வளர்ந்து உச்சத்தித்தில் இருக்கும் பிரபலங்கள் மாத்திரங்களை மட்டுமல்ல வளர்ந்து வரும் நடிகர்களையும் சேர்த்து தான் சொல்வேன்.


மேலும் நான் பிறந்த போது வைச்ச பேர் முத்து தான் அதனால என்னுடைய முதல் ப்ரஜெக்ட்டுக்கும் இந்த பெயர் வைச்ச போது வீட்டில ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நான் இயல்பாகத் தான் இந்த சீரியலில் நடிச்சிட்டு வருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement