• Jul 25 2025

நேரம் வந்தாச்சு... உடனே அவங்கள வெளிய அனுப்புங்க... பிக்பாஸ் போட்டியாளரை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஏனைய சீசன்களைப் போலவே நாளுக்கு நாள் களை கட்டிய வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் வகையிலான போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் டாஸ்க் என்றாலே அங்கு சண்டை வருவது வழமை. அதாவது போட்டியாளர்கள் அடித்துக்கொள்ளாத குறையாக வாய்த்தகராறில் ஈடுபட்டு பார்வையாளர்களின் பிபியை எகிற வைப்பார்கள்.

ஆனாலும் கமல்ஹாசன் சண்டை போடுவது டாஸ்க் அல்ல, கொடுக்கும் டாஸ்க்குகளை சுவாரசியமாக கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள் என பலமுறை கூறிவிட்டார். ஆனால் அதனை ஹவுஸ்மேட்ஸ் யாரும் கேட்டதாய் தெரியவில்லை. 


இந்நிலையில் இந்த வார டாஸ்க்கிலும் பலத்த சண்டை மூண்டுள்ளது. இதனை இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரோமோக்கள் உறுதிப் படுத்தி உள்ளன. அதில் முதல் ப்ரமோவில் அம்மாவை மோசமாக பேசி விட்டதாக தனலெட்சுமியிடம் சண்டை போட்டார் ஷிவின். ஆனால் தனலெட்சுமி சிரித்தப்படியே நான் அப்படி சொல்லவில்லை என கூலாக அவருக்கு பதில் கூறினார். 


இதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரமோவில் அசீமூக்கும் ஜனனிக்கும் இடையே பலத்த மோதல் வெடித்துள்ளது. அதாவது லூசு மாதிரி பேசாதே என்று வாயை விட்டார் ஜனனி.

இதனால் கடுப்பான அசீம் கோபத்தில் லூசு என்றெல்லாம் பேசக்கூடாது என்றார். உடனே டாப்பிக்கை மாற்றிய ஜனனி, கையை நீட்டி பேசாதே, நீ போ என்று என்னை பேச நீ யார் என கத்தி வயதிற்கு மரியாதை கொடுக்காது பிக்பாஸ் வீட்டை ரணகளம் ஆக்கி இருக்கின்றார்.


இந்த ப்ரமோவை பார்த்துக் கடுப்பான நெட்டிசன்கள் பலரும் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஜனனி பிக்பாஸ் வீட்டில் செய்யும் தவறுகளையும் ஒவ்வொன்றாக பட்டியலிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த வாரம் நடைபெற்ற கோர்ட் டாஸ்க்கில் தனது தமிழை, விக்ரமன் இழிவாக பேசினார் என பொய் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். ஆனால் விக்ரமன் அப்படி சொல்லவில்லை என்பது இறுதியில் நிரூபணமானது.


மேலும் சமீபத்தில் வெளியேறிய மகேஸ்வரியிடம் பெண்கள் சிகரெட் பிடிப்பாங்களா? கேவலமா இருக்கு என்றார் ஜனனி. அத்தோடு ஆயிஷா தீபாவளியன்று மயங்கியதை கூட டிராமா என்று புரளி பேசி இருந்தார். இவ்வாறாக அவர் பேசியதையெல்லாம் கூறி தன்வினை தன்னைச் சுடும் என குறிப்பிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் ஜனனி பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவைரையும் பெயரை சொல்லித்தான் அழைக்கிறார், யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை என்றும் தாறுமாறாக விளாசி வருகின்றனர். இந்நிலையில் எந்தவொரு காரணமுமே இல்லாமல் அசீம்மிடம் கத்தும் ஜனனியை இந்த வாரம் நிச்சயமாக வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். 


அதுமட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் இதுவரை தனது திறமையை வெளிக்காட்டாத ஜனனி, சம்பந்தம் இல்லாமல் அடிக்கடி ஹவுஸ்மேட்டுகளுடன் சண்டை போட்டு வருகின்றமை பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement