• Jul 26 2025

எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் ..? பல உண்மைகளை உடைத்த சமந்தா

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். எனினும் இவர்கள் இருவரிற்குமிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக இவர்கள் இருவரும் விவாகரைத்துப் பெற்றுப் பிரிந்து விட்டார்கள். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பலவிதமாக பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் காபி வித் கரண் ஷோவில் சமந்தா பங்கேற்றபோது அவரிடம் 'மீண்டும் லவ் பண்ணுவீங்களா' என கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லவே இல்லை என பதில் கூறி இருக்கிறார்.

அத்தோடு சமந்தா இதயத்திற்கு செல்ல என்ன வழி என கரண் ஜோகர் கேட்க 'அது மூடப்பட்டு இருக்கிறது. U டர்ன் எடுத்து போய்டுங்க' என தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமின்றி தான் 250 கோடி ருபாய் ஜீவனாம்சம் வாங்கியதாக வந்த வதந்தியை பார்த்து வருத்தப்பட்டதாகவும், எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன் என காமெடியாக பதிலளித்து இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement