• Jul 25 2025

படப்பிடிப்புக்கு வரும் போதெல்லாம், எப்போதும் ...ராஷ்மிகா மந்தனாவின் ரகசியத்தை பொது வெளியில் கசிய விட்ட பிரபலம்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

தி அதர் வே, கலங்க் மற்றும் தப்பாட் ஆகிய படங்களில் சிறந்த பாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர், நடிகர் பவைல் குலாட்டி சினிமா துறையில் நன்கு பாராட்டப்பட்ட நடிகர் இவர். இவர் பாலிவுட்டில் முத்திரை பதிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பதை அவரது படைப்புகள் தெளிவாக சித்தரிக்கின்றன, இவருடைய படைப்புகளும் அதற்கு ஒரு உதாரணம். அடுத்ததாக அமிதாப் பச்சன், நீனா குப்தா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த குட்பை படத்தில் நடிக்கும் குலாட்டி, இந்த உயர்மட்ட பிரபலங்களுடன் பணியாற்றியதை எப்படி உணர்கிறார் என்பதையும் மனம் திறந்து பேசியுள்ளார்.


ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டபடி, “நீனா ஜியும் ராஷ்மிகாவும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்தேன், ராஷ்மிகா மிகவும் அன்பானவர், அவரது அழகான புன்னகை மற்றும் வேலை செய்யும் விதம் தனி ரகம் . ராஷ்மிகா படப்பிடிப்புக்கு வரும் போதெல்லாம், எப்போதும் சிரித்துக்கொண்டே எல்லோர் முகத்திலும் புன்னகையை வரவழைப்பார், என சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

Advertisement