• Jul 26 2025

ஹேமா எங்கே...குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இத்தொடரில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்..

 ஹேமா தாம்பரத்தில் உள்ள ஆசிரமத்தை தேடி அலைய ஒருவர் சொன்ன தகவலின் படி ஆசிரமத்தை கண்டுபிடிக்கிறார்.ஹேமாவை தேடும் வெண்பாவின் அடியாட்களும் ஒரு வழியாக அவளை கண்டுபிடிக்க அதற்குள் ஹேமா ஆசிரமத்திற்குள் சென்று விடுகிறார். உள்ளே சென்ற ஹேமா பத்து வருடத்திற்கு முன்னாடி என்ன இந்த ஆசிரமத்தில் இருந்து தான் என் பாட்டி எடுத்துட்டு போய் இருக்காங்க என்ன இங்க கொண்டு வந்து விட்டது யாரு என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

அத்தோடு  நீ யாரு உன் பாட்டி பேரு என்ன என கேட்க சௌந்தர்யா என சொல்ல அவர்கள் ஹேமாவை கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு நான் ரெக்கார்ட்ஸ் பார்த்து சொல்றேன் என கூறி  உடனடியாக சிஸ்டர் சௌந்தர்யாவுக்கு போன் போட்டு ஹேமா இருக்கும் விஷயத்தை சொல்கிறார்.


இந்த விஷயத்தை கேட்கும் ஹேமா உடனடியாக அங்கிருந்து எழுந்து கிளம்பிச் செல்ல வெண்பாவின் அடியாட்கள் அவளை கடத்தி விடுகின்றனர். எனினும் அதற்குள் ஹேமாவை காணவில்லை என ஆசிரமத்தில் இருப்பவர்கள் தேட சௌந்தர்யாவின் குடும்பமும் வந்துவிடுகிறது. அவர்களிடம் ஹேமா காணாமல் போன விஷயத்தை சொல்ல தேடி அலைகின்றனர்.



எனினும் அப்போது கண்ணம்மாவின் கையில் ஹேமாவின் செப்பல் ஒன்று கிடைக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு அங்கு பக்கத்தில் இருந்த கடைக்காரரிடம் விசாரிக்க ஒரு கார் வேகமாக போனதாக சொல்ல குடும்பம் மொத்தமும் பதறி அந்த காரை தேடி அலைகிறது. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

Advertisement

Advertisement