• Jul 24 2025

மறைந்த நடிகர் மனோபாலாவிற்கு மாபெரும் நினைவேந்தல்... யாரெல்லாம் கலந்து கொள்வார்கள்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் மனோபாலா. கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த மனோபாலா சமீபத்தில் உயிரிழந்தார். அவரின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


அவரின் மறைவுச் செய்தி அறிந்ததும் அவரின் இல்லத்திற்கு படையெடுத்த தமிழ் சினிமா பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில் நடிகர் மனோபாலாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தற்போது நடிகர் சங்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நாளை மறுநாள் மே 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு  தி.நகரில் உள்ள பி.டி தியாகராஜா ஹால்  பகுதியில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் மனோபாலாவுக்கு நெருக்கமான மற்றும் அவர் மீது மதிப்பு கொண்ட திரை நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement