• Jul 24 2025

என் படத்துக்கு பேக் அப் சொல்ல நீ யாரு- பிரபல கவர்ச்சி நடிகையை கண்டவாறு பேசிய அஜித்- எந்த படத்தில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

அமர்க்களம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் - சரண் கூட்டணி அட்டகாசம் படத்தின் மூலம் இணைந்தது.  தூத்துக்குடியை பேக் ட்ராப்பாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படமும் ஹிட்டானது.படம் கமர்ஷியலாக உருவாகி அதில் இருக்கும் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. 

குறிப்பாக தெற்கு சீமையில என்னை பத்தி கேளு பாடலை வைரமுத்து அதகளமாய் எழுதியிருப்பார். அந்தப் பாடலில் தீபாவளி தல தீபாவளி என அஜித்தின் பட்டமான தல என்ற வார்த்தையை வரும்படி எழுதி ஒரு மேஜிக் நிகழ்த்தியிருப்பார். இன்றுவரை அந்தப் பாடல் அஜித் ரசிகர்களின் ஃபேவரைட்.இந்தப் பாட்டின் ஷூட்டிங்கின்போது பாடலில் நடனமாடிய நடிகை ரகசியாவை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அஜித் துரத்திய சம்பவம் தெரியவந்திருக்கிறது. 


அதாவது பாடலின் ஷூட்டிங்போது இரண்டு சரணம், ஒரு பல்லவிக்கான நடன காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதனையடுத்து விடப்பட்ட பிரேக்கில் ரகசியா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். ஆனால் அதை அஜித் பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.

சூழல் இப்படி போய்க்கொண்டிருக்க அடுத்தக்கட்ட ஷூட்டிங் தொடங்க தாமதமாக ரகசியா, "என்னங்க பேக் அப் பண்ணிடலாமா" என கேட்டிருக்கிறார். இதை கேட்டு உச்சக்கட்ட கோபமடைந்த அஜித், நேராக அவரிடம் சென்று என் படத்துக்கு பேக் அப் சொல்ல நீ யாரு என கேட்டிருக்கிறார். 


அதனையடுத்து இயக்குநர் சரணை அழைத்து இனி இந்தப் பொண்ணு இங்க இருக்கக்கூடாது அனுப்பிவிட்ருங்க என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அதனால்தான் பாடலின் பாதியில் ரகசியா இடம்பெற்றிருக்கமாட்டார். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருந்தார். ரகசியா வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சீனா தானா பாடலுக்கு நடனமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement