• Jul 26 2025

கோபப்படக்கூடாது என்று சொல்ல நீங்க யாரு- தனலக்ஷ்மியை வறுத்தெடுத்த கமல்ஹாசன்- எதிர்பார்த்த ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டு இப்போது சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் இந்த வீட்டில் கடந்த ஒரு வாரத்தில் ஆட்டம் போட்ட அசீம் அமைதியாகிவிட்டார் ஒரளவு சச்சரவு இருந்தாலும் பழைய ஸ்டைல் இல்லை. ஆனால் தனலட்சுமி எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசுவது, கண்டபடி திட்டுவது என்று மிரட்டல் தொனியில் நடந்து வருகிறார்.

 மறுபுறம் கோஷ்டி சேர்ந்து ஒருவரை கார்னர் செய்யும் போக்கும் புதிதாக அன்பு டீம் முளைத்து செய்து வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது வெளியாகிய ப்ரோமோவில் தனலக்ஷ்மியைப் பார்த்து கமல்ஹாசன் குத்தலாகப் பேசியுள்ளார்.


அதாவது தனலக்ஷ்மி  வீட்டில இருக்கிறவங்க உங்க கிட்ட ஒரு கருத்தை சொல்ல தயங்குகிறாங்க என்று தெரியுமா? நீங்க கோபப்படுறீங்க என்று யாரு சொன்னாலும் அதை சொல்ல நீங்க யாரு என்று கேட்கிறீங்க. கோபப்பட்டதை சொன்னாலும் தப்பு சொல்லலை என்றாலும் தப்பு என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்துகின்றனர்.இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement