• Jul 25 2025

சீன் க்ரீயேட் பண்றது யாரு?- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி- தனலட்சுமி, அசீமை தாளித்து எடுத்த கமல்- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சொர்க்கமா..நரகமா டாஸ்க் நடைபெற்றது.இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். இதில், அமுதவாணன், அசீம் இருவரும் இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமராக தேர்வு செய்யப்பட்டனர்.

அத்தோடு 70ம் நாளாகிய நேற்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம். கமல்சேர் எப்பிஷோட் என்பதால் அவர் வீட்டில் யார் அதிகமாக சீன் கிரியேட் பண்றாங்க என்று கேட்ட போது பெரும்பாலானோர் அசீம் மற்றும் தனலக்ஷ்மியின் பெயர்களைக் கூறினார்கள்.


அதனைத் தொடர்ந்து எவிக்ஷனுக்காக சில அறிவுரைகளை ஹவுஸ்மேட்ஸிடம் கூறினார்.எவிக்ஷனுக்காக முதலில் சீட்டுக் குலுக்கிப் போட்டனர்.அதில் ஏடிகே மணிகண்டனின் பெயரை எடுத்தார். இதனால் மணிகண்டன் தான் வெளியேறுவார் என ஹவுஸ்மேட்ஸ் எண்ணிக் கொண்டிருந்தனர்.

பின்பு வந்த கமல்ஹாசன் இப்படி எல்லாம் பண்ணக்கூடாது. முறையான காரணங்களுடன் தான் ஒருவரை வெளியேற்ற முடியும் எனக் கூறினார்.தொடர்ந்து ஜனனி எவிக்டாக வெளியேறினார். அவரது பயணவீடியோ 10 நிமிடங்களுக்கு மேலாக ஓடியது. ஜனனி வீட்டை விட்டு வெளியேறும் போது அமுதவாணன் உடைந்து அழ ஆரம்பித்தார்.


மேலும் தனது பயண வீடியோவைப் பார்த்தவுடன் அவர் கண்கலங்கி அழ ஆரம்பித்தார்.பின்னர் ஜனனியை கமல்ஹாசன் சமாதானப்படுத்தினார். தொடர்ந்து சில அறிவுரைகளை கூறி ஜனனியை அனுப்பி வைத்தார். அத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.



Advertisement

Advertisement