• Jul 26 2025

காட்டுக்குள் வைத்து பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை; திரைத்துறையில் பரபரப்பு- தவறாக நடந்துகொண்ட நடிகர் யார்?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் நடிகை, மாடல், நடனக் கலைஞர், பாடகி, தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து வருபவர் நடிகை நோரா பதேஹி. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான 'பாகுபலி' படத்தில் நடித்து பிரபலமான இவர் இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து மலையாளம் உட்படப் பல மொழிகளிலும் பல படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் இவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். 


அதாவது இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நோரா பதேஹி பேசும்போது, "நான் நடித்த ரோர்: தி டைகர் ஆப் சுந்தர்பேன்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு வங்கதேசத்தில் உள்ள காடுகளில் நடந்து கொண்டிருந்தது. அப்போது என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர் தவறாக நடக்க முயன்றார். 


அதற்கு உடனே அந்த நடிகரின் கன்னத்தில் நான் ஓங்கி அறைந்தேன். பதிலுக்கு அவரும் அந்த இடத்தில வைத்து என்னை அடித்தார். இதனால் கோபத்தில் மீண்டும் நான் அவரை திருப்பி அடித்தேன். அப்போது எனது தலைமுடியை பிடித்து அந்த நடிகர் பலவந்தமாக இழுத்தார். இதனால் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு மோசமாக திட்டி அடிதடி சண்டை போட்டுக்கொண்டோம்" என ஓப்பனாக பேசியுள்ளார்.


நடிகை நோரா பதேஹிக்கு நடந்த இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதுமட்டுமல்லாது சக நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நடிகரை பலவாறு விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement