• Jul 24 2025

யார் இந்த பிக்பாஸ் வாசுதேவன்? பல கோடிகளில் புரளும் இவரின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் தன் தனித்துவமான குரலால் பலரையும் கவர்ந்த  மலேசிய வாசுதேவனின் மகன் தான் இந்த யுகேந்திரன். தந்தையைப்போல இவருக்கும் இசையில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் சிறுவயதில் இருந்து இவரும் இசையைக் கற்று சினிமாவிலும் பாடல் பாடி இருக்கிறார்.



பாடல் பாடுவதோடு மட்டுமல்லாமல் சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். அஜித்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் யுகேந்திரன். இறுதியாக யுத்தம் செய் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மேகலா மற்றும் இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

சிறு வயதிலேயே இசை கற்ற இவர் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவர் உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதல் பாடலான ”செந்தூரப் பூவே” எனும் பாடலை ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த மாலினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது மூன்று  குழந்தைகளும் இருக்கிறார்கள்.



விஜய் தாெலைக்காட்சியில் ஔிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  போட்டியாளராக கலந்து கொண்ட யுகேந்திரன் ஆரம்பத்தில் ரசிகர்களை கவரவில்லை. ஆனால் தற்போது  பிக்பாஸ்  நிகழ்ச்சியில் இவர் விளையாடும் விதம் அனைவருக்கும் பிடித்துப் போகவே ரசிகர்களும் இவருக்கு ஆதரவினை  தெரிவித்து வருகிறார்கள். இந் நிலையில் இவரின் சொத்து மதிப்பு விபரம் தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது. .

இவரிடம் இருக்கும் சொத்து மதிப்பானது தற்போது 15 இலிருந்து 20 கோடி வரைக்கும் இருக்கும் என சொல்லப்படுவதோடு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் சம்பளமாக 27 ஆயிரம் ரூபாய் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement