• Jul 26 2025

குக்வித் மோமாளி நிகழ்ச்சியில் திடீரென நடந்த டுவிஸ்ட்.. எலிமினேஷனில் இப்படி ஒரு மாற்றமா..? அப்போ வெளியேறியது யார்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற ஒரு நிகழ்ச்சி தான் 'குக்வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து விட்ட நிலையில், இதன் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.


விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்ற இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எலிமினேஷன் ஆகியுள்ளன நிலையில், இந்த வாரம் நடைபெற்றுள்ள குக் வித் கோமாளி எலிமினேஷன் சுற்றில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்ற பதற்றத்துடனே ரசிகர்கள் இருந்து வந்தனர். குறிப்பாக விஜே விஷால் அலல்து மைம் கோபி இருவரில் ஒருவர் தான் வெளியேற போகிறார்கள் என்று கூறப்பட்டது.


இந்நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் யாருமே வெளியேறவில்லை, இருவரும் காப்பாற்றப்பட்டு விட்டார்கள். அந்தவகையில் இறுதி கட்டத்தில் மோதிக்கொண்ட இருவரும் நடுவர்களின் சிறந்த பாராட்டை பெற்று நல்ல உணவுகளை கொடுத்ததால், இருவருமே காப்பாற்றப்பட்டுள்ளனர். 


வழக்கமாக இறுதிவாரம் நெருங்கும் சமயத்தில் தான் நோ எலிமினேஷன் என நடுவர்கள் அறிவிப்பார்கள். ஆனால் இந்தமுறை வித்தியாசமான முறையில் ஆரம்ப கட்டத்திலேயே நோ எலிமினேஷன் என அறிவித்துள்ளதால் போட்டியாளர்களும் உற்சாகத்தில் திளைத்துப்போயினர். 

Advertisement

Advertisement