• Jul 25 2025

யார் காதலை முதலில் சொன்னது ..? ரவீந்தர் கூறிய சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காதலை முதலில் சொன்னது யார் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

 தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், சீரியல்  நடிகையான மகலாட்சுமியும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். அதை பார்த்தவர்கள் இது பணத்துக்காக நடந்த திருமணம் என்று  பலரும் விமர்சித்தனர்.


அத்தோடு  ஒரு மாதம் காதலித்த வேகத்தில் அவசர, அவசரமாக திருமணம் நடந்ததாக பேச்சு கிளம்பியது. இல்லை, இல்லை இது அவசர கல்யாணமோ, கட்டாய கல்யாணமோ இல்லை என்று ரவீந்தர்   முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

தானும், மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் சொல்லியுள்ளார். காதல் சரி, அதை யார் முதலில் சொன்னது என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.



இந்நிலையில் ப்ரொபோஸ் செய்தது நான் தான் என ரவீந்தர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ப்ரொபோஸ் செய்தாலும் ரொமான்டிக்கான முறையில் எல்லாம் காதலை கூறவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்

தன்னுடைய உருவத்தை பார்த்து தான் இந்த திருமணத்தை பற்றி பலரும் விமர்சிப்பதாக ரவீந்தர் கூறியிருக்கிறார். அத்தோடு என்னை தவிர அனைவருக்கும் என் வெயிட் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது என்கிறார் அவர்.

Advertisement

Advertisement