• Jul 25 2025

அதெல்லாம் சுத்த பொய் யார் கிளப்பிவிட்டது- சமந்தா விவகார வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகசைத்தன்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள யசோதா திரைப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.இப்படத்தின் ட்ரெய்லர் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

வழக்கமாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் அவர் தோல் சம்மந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.


அதனால் தான் அவர் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என்று வதந்திகள் கிளம்பின. இந்நிலையில் தனக்கிருக்கும் உடல்நலப் பிரச்சனை குறித்து சமந்தா பதிவிட்டுள்ளார். இது பற்றி சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்ட அவர் மையோசிட்டிஸ் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையில் இருப்பதாகவும், அதில் இருந்து இப்போது குணமாகி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். 

இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவர் சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என நம்பிக்கை வார்த்தைகளை பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் சமந்தாவை அவரின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சென்று சந்தித்ததாக வதந்திகள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ஆனால் அந்த தகவல் உண்மையில் இல்லை என்று சைதன்யா தரப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement