• Jul 23 2025

என்னமா மிருணாள் தாகூர் இப்படி பண்ணிட்டிங்களே... லிப் லோக் காட்சியில் சீதா ராமம் நடிகை... டீசரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். குறிப்பாக தென்னிந்திய ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தார். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் அதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


நடிகை மிருணாள் தாகூரிற்க்கு  பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. அதன்படி, நாணி நடிப்பில் உருவாகியுள்ள Hi நானா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


நடிகர் நாணி, மிருணாள் தாகூர், ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம் தந்தை, மகள் இடையிலான பாசத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீசரில் மிருணாள் தாகூர் மட்டுமே நாணி லிப் லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.


இதை பார்த்த ரசிகர்கள் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூரா இது என ஷாக்காகியுள்ளனர். இந்த திரைபடானது எதிர் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி திரைக்குவரவிருக்கிறது.


Advertisement

Advertisement