• Jul 27 2025

வெற்றி பெற வாய்ப்பிருந்தும் விக்ரமன் பைனலில் தோற்றுப்போனது ஏன்? - வெளியான ஷாக்கிங் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று நிறைவடைந்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், அமுதவாணன், மைனா ஆகிய 6 பேர் தான் இறுதி வாரத்துக்கு தகுதி பெற்றனர். இதில் கதிரவன் ரூ.3 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார். அதேபோல் அமுதவாணனும் ரூ.11 லட்சத்தை எடுத்துக் கொண்டு நடையை கட்டினர். மைனாவும் சர்ப்ரைஸாக எலிமினேட் செய்யப்பட்டார்.

இறுதியாக ஷிவின், அசீம் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் தான் டாப் 3 போட்டியாளராக தகுதி பெற்றனர். இதில் யார் டைட்டிலை ஜெயிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இதற்கு முந்தைய சீசன்களில் யார் வெற்றிபெறுவார் என ஈஸியாக கணிக்க முடிந்தது. அதேபோல் இந்த சீசனிலும் விக்ரமன் அல்லது ஷிவின் தான் டைட்டிலை ஜெயிப்பார்கள் என கணிக்கப்பட்டு இருந்தது.ஆனால் இந்த முறை ரசிகர்களின் கணிப்பு தவறாகப் போய் உள்ளது. 


இறுதியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அசீம் டைட்டிலை ஜெயித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு உள்ளது. விக்ரமன் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டு 2-ம் இடம் பிடித்தார். ஷிவினுக்கு 3-வது இடமே கிடைத்தது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை விக்ரமன் தான் ஜெயிப்பார் என ரசிகர்கள் பலரும் கணித்து வந்த நிலையில், அவர் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கான முக்கியமான காரணம் ஒன்றும் கூறப்படுகிறது. அது என்னவென்றால், விக்ரமன் ஒரு அரசியல்வாதி என்பதால் அவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் டுவிட்டரில் பிரச்சாரம் செய்து வந்தார்.


இதுதான் விக்ரமனுக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது. அரசியல் தலையீடு ஏற்பட்டதன் காரணமாக தான் விக்ரமன் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து 2-ம் இடம் பிடித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் அசீம் வெற்றிக்கு தகுதி இல்லாதவர் என விக்ரமனின் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement