• Jul 26 2025

சினிமாவை விட்டு விலகியது எதனால்..? முதன்முதலாக மனம் திறந்த மீரா ஜாஸ்மின்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மீரா ஜாஸ்மின் என்றதுமே நம்மில் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது, ரன் படத்தில் அமைதியாக ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்த அவரது அழகும், 'சண்ட கோழி' படத்தில் துரு துரு குடும்ப குத்துவிளக்காக நடித்த அவரது கதாபாத்திரமும் தான். 


இதனையடுத்து மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தார். ஆனால் 2014-க்குப் பிறகு மீரா ஜாஸ்மின் எந்தவொரு படங்களிலும் நடிக்கவில்லை. அந்தவகையில் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். 

இதனைத் தொடர்ந்து தற்போது மீரா ஜாஸ்மின் இயக்குநர் சசிகாந்த்  இயக்கும்  ‘டெஸ்ட்’  என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மீரா ஜாஸ்மீன் சினிமாவில் சிறிது காலம் விலகி இருந்தமைக்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "நான் ஏற்கனவே மாதவன், சித்தார்த் ஆகியோருடன் நடித்துள்ளேன். தற்போது நயன்தாராவுடன் நடிக்க ஆவலாக உள்ளேன். எனது பயணம் சிறப்பான ஒன்றாகவே இதுவரை இருந்திருக்கிறது" என்றார்.


மேலும் "சில ஆண்டுகாலம் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நடிப்பதில் இருந்து விலகி இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறேன். அதனால் எனது பயணம் மீண்டும் ஆரம்பமாவது போல் இருக்கிறது. சமூக வலைதளங்களில் என்னுடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் பாஸிட்டிவாக பதிலளிப்பதால் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனவும் கூறியுள்ளார் மீரா ஜாஸ்மின்.

Advertisement

Advertisement