• Jul 25 2025

அட்லீ வீட்டு விழா, வாரிசு ஆடியோ வெளியீட்டிற்கு விஜய்யின் மனைவி வராதது ஏன்? திடீரென வெளியான காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. பீஸ்ட் பட படப்பிடிப்பின் போதே இப்படத்திற்கான அறிவிப்பு வந்துவிட்டது, படம் முழுவதும் தயாராகி வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது, நேற்று சன் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பும் ஆனது.

கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு TRP எகிரியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தான் கூற வேண்டும்.



விஜய்யின் எந்த பட நிகழ்ச்சி என்றாலும் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்வார். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சி என்றாலும் கலந்துகொள்வார். ஆனால் அட்லீ-ப்ரியாவின் சீமந்தம், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு சங்கீதா அவர்கள் வரவில்லை.

இதனால் பல செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன.அத்தோடு அவர் வராததற்கு முக்கிய காரணம் அவர்களின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா அங்கு இருப்பதால் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லை என சொல்லப்படுகின்றது.




Advertisement

Advertisement