• Sep 09 2025

'ஏன் கால்ல விழுற... அறிவில்லையா உனக்கு?' - ரஜினியால் கடுப்பாகிய இயக்குநர் பா.இரஞ்சித்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயிலர் பட வெற்றியால் ரஜினிகாந்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்கள் தற்போது அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணம் நேற்று நடந்த சம்பவம் தான். ஆன்மீக பயணமாக உத்தர பிரதேசம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்த், யோகியின் காலில் விழுந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.


ரஜினி காலில் விழுந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் படு வைரல் ஆனதால், ரஜினியை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். 

ரஜினி ரசிகர்கள் சிலரே அவரது இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். காலா, கபாலி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பா.இரஞ்சித், காலில் விழுவது பற்றி ஆவேசமாக பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், “ஏன் கால்ல விழுற, அறிவில்ல உனக்கு. இன்னொருத்தன் கால்ல விழுறது எவ்வளவு பெரிய அடிமைத்தனம். அந்த அடிமைத்தனத்தை நீ ஏன் தொடர்ந்து செஞ்சிட்டு இருக்க. உன் அப்பா, அம்மா காலை தவிர வேற எவன் கால்லயும் விழாத நீ” என பா.ரஞ்சித் ஆவேசத்துடன் பேசும் அந்த பழைய வீடியோ தற்போதைய சூழலுக்கு ஒத்துப் போவதாக கூறி நெட்டின்கள் வைரலாக்கி வருகின்றனர்.



Advertisement

Advertisement