• Jul 26 2025

தண்ணீர் இருக்கும் போது எதற்காக ஒரு நாடு ஒரே வெங்காயம் என்று பேசிறீங்க- காவேரி பிரச்சினை பற்றி பேசிய மன்சூர் அலிகான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

80ஸ்,90ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் வில்லனாக கலக்கி வந்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமின்றி ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். 

தற்போது நடிகர் மன்சூர் அலிகான் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் நடிகர் மன்சூர் அலிகான் கமிட்டாகியுள்ளார்.


மன்சூர் அலி கான் நடிப்பை தாண்டி சமூக கருத்துக்களை வெளிப்படையாக தைரியமாக பேச கூடியவர்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மன்சூர் அலி கான் காவேரி விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஹெலிகாப்டரில் கர்நாடகாவுக்கு சென்று பாருங்கள் அங்கு இருக்ககூடிய அணைகளை பாருங்கள்.


தண்ணீர் அந்த அளவிற்கு இருக்கிறது. இப்படி இருக்கும் போது எதற்காக ஒரு நாடு ஒரே வெங்காயம் என்று பேசுகிறார்கள் என்று மன்சூர் அலி கான் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement