• Jul 25 2025

தகாத வார்த்தைகள் எதற்கு? - சூட்டிங்கில் அப்படித் தான் இருப்போம்- எச்சரிக்கை விடுத்த பிரபல சீரியல் நடிகை!!

stella / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.மேலும் தினமும் சீரியல்கள் ளிபரப்பாகி வருவதால் பல இல்லத்தரிசிகள் சீரியல் பார்ப்பதையே பொழுது போக்காக கொண்டுள்ளனர்.

அப்படி பல டிவி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2-வது சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.கேப்ரியல்லா, சுவாதி, சித்தார்த் கண்ணன், திராவியம் ராஜகுமரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.


 இந்த தொடரின் கேப்ரியல்லா நடித்து வரும் காவியா கேரக்டருக்கு அம்மாவாக நடித்து வருபவர் கிருபா.ஆச்சி மசாலா நிறுவனத்தில் எச்.ஆர். மேனேஜராக பணியாற்றி வந்த இவர், சில விளம்பர படங்களில் நடித்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தற்போது பிரபல சீரியல் நடிகையாக உள்ளார்.

மேலும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கிருபா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.


இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், காவியா மற்றும் பிரியாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.இந்த பதிவுகள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி இரு தரப்பு ரசிகர்களும் வலைதளங்களில் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்ட நிலையில், தகாத வார்த்தைகள் கொண்ட பல கமெண்ட்கள் வர தொடங்கியுள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை கிருபா, இது வெறும் புகைப்படம் அவ்வளவுதான். நீங்கள் இப்படி நடந்துகொள்வதை நாங்கள் விரும்பவில்லை.சீரியலில் மட்டும் தான் நாங்கள் அப்படி.. மற்றபடி செட்டில் நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் பேசிக்கொண்டிருப்போதும். இதை ஒரு பொழுதுபோக்காக பாருங்கள்.நீங்கள் பதிவிட்ட கருத்துக்களை நீங்களே டெலிட் செய்துவிடுங்கள். இல்லை என்றால் நான் ப்ளாக் செய்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement