• Sep 10 2025

ஒரே மாதமாக ஒரே டிரஸ்ஸில் எப்பிடி தான் நடிக்கிறது- புலம்பும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் ஒவ்வொரு வாரமும் TRP-யில் முன்னணியில் இருந்து வருகின்றது.தன்னுடைய பெரியப்பா தர்மலிங்கத்தின் அனைத்து சதி திட்டங்களையும் முறியடித்து, தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வரும் கயல், திருமண வயதை எட்டிய போதிலும் தன்னுடைய குடும்பத்திற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். 

கயலின் இந்த குணத்தை பார்த்தே பல வருடங்களாக காதலித்து வருகிறார் கயலின் நண்பரான எழில். பல சூழ்நிலைகளில் கயலுக்கு உறுதுணையாக எழில் இருந்து வரும் அதே நேரம், எழில் மீது கயலுக்கு காதல் இருந்தாலும் குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து ஏற்க மறுக்கிறார். எழிலை மணமேடையில் பார்க்கும் போது தான் கயலுக்கு அவர் மீது உள்ள காதலே புரிகிறது.


 எனினும் காதலை ஓரம் கட்டி வைத்துவிட்டு, ஆர்த்திக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கிறார்.எழில் எப்படியும் கயலை தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவில் உள்ளதால் கயலை தீர்த்து கட்ட வேண்டும் என அவருக்கு எதிராக திட்டங்கள் போடப்படுகிறது. இருப்பினும் எழில் கயல் கழுத்தில் தான் தாலி கட்டி விட்டார் என்றும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தான் ஒரு மாதமாக ஒரே டிரஸ்ஸில் நடித்து கொண்டிருப்பதாகவும், இதற்கு ஒரு எண்டே இல்லையா என கேட்டு இருக்கிறார்.இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement