• Jul 24 2025

நடிகர்களை எதற்கு தலைவர்களாக கூப்பிட வேண்டும்- ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இறுதியாக தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகின்றார்.இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.

இது தவிர சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தை இயக்கி வருகின்றார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின்  உருவாக்க முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியாகி,ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.இதேபோல் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் உள்ளன.


இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதல் தலைமுறை சினிமா என்ற தலைப்பில் வெற்றி மாறன் உரை ஆற்றினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், "நடிகர் எம்.ஜி.ஆர் அளவுக்கு  எந்த ஒரு நடிகருக்கும் ரசிகர்கள் இல்லை என்று சொல்வார்கள். 

நாம்  கதாநாயகர்களையும் அவர்களின் பிம்பங்களையும் கொண்டாடுபவர்கள்.இன்றைக்கு அது அப்பட்டமாக தெரிகிறது.அது மன வருத்தத்தை ஏற்படுத்துற மாதிரி இருக்கு. ரொம்ப நாளாக எங்க சொல்லலாம் என்று யோசித்து இருந்தேன். அதை இங்கே சொல்கிறேன்.நடிகர்களை தலைவர் என்று சொல்வது எனக்கு வருத்தத்தை உண்டு பண்ணும். எனக்கு அதில் உடன்பாடில்லை. அதை பண்ணாமல் இருக்கலாம்.  முன்னாடி இருந்தவர்கள் அரசியலோடு சம்பந்தப்பட்டு இருந்தார்கள். அவர்களைத் தலைவர் என்று கூப்பிடுவது ஓகேவா இருந்தது. இன்றைக்கு நடிகர்களை அப்படி கூப்பிடுவது நெருடலாக இருக்கிறது" என வெற்றிமாறன் பதில் அளித்தார்.




Advertisement

Advertisement