• Jul 25 2025

அந்த வார்த்தையை ஏன் என்னைப் பார்த்து சொல்லணும்- போஃல்டாக பேசிய வி.ஜே மகேஸ்வரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத பல அதிரடியான நிகழ்வுகள் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்த நிகழ்ச்சியை பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகமான பேச்சு பரவிக் கொண்டுதான் இருக்கிறது. 

ஷீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே மகேஸ்வரியும் இதில் கலந்து கொண்டார்.அங்கு எந்த இடத்திலும் தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் சரி என்று பட்டதை தைரியமாக பேசி வந்தார். அதனாலேயே இவர் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.


இந்த நிலையில் மகேஸ்வரி ஒரு சில வாரங்களிலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்.அதற்குப் பிறகு பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றதில் தன்னுடைய மகனோடு மேடையில் ஒன்றாக பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.


அதில் பிரியங்கா, மகேஸ்வரி இடம் ஒரு சிங்கிள் மதர் ஆக இருந்து நீங்கள் உங்கள் குழந்தையை வளர்த்து வந்திருக்கிறீர்கள். உங்களைப் போன்று தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த சிங்கிள் என்கிற வார்த்தையை எடுத்து விடுவோம். சிங்கிள் பேரண்ட் என்று சொல்வதை விட பேரண்ட் என்றாலே அவர்கள் பாராட்டப்பட கூடியவர்கள் தான். அதில் தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களாக இருந்தாலும், சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாமே பாராட்டப்பட கூடியதுதான் என்று பேசியிருக்கிறார்.இதனால் ரசிகர்கள் மகேஸ்வரியை பாராட்டி வருகிறார்கள்.


Advertisement

Advertisement